501(c)(3) இலாப நோக்கற்றது · WASC அங்கீகாரம் பெற்றது501(c)(3) Non-Profit · WASC Accredited
Avvaiyar Padasalai logo
ஔவையார் பாடசாலை Avvaiyar Padasalai
முகப்புHome
செயல்நோக்கம்Mission அணிTeam
பள்ளி ஆண்டுSchool Year
பாடத்திட்டம்Syllabus நாட்காட்டிCalendar
செய்திகள்Updates
அறிவிப்புகள்Notices நிகழ்வுகள்Events பதிவிறக்கங்கள்Downloads
தன்னார்வலர்Volunteer பெற்றோர் தளம்Parent Portal பின்னூட்டம்Feedback நேரலைLive உதவிHelp
பதிவு செய்கRegister to Volunteer
அறிவிப்புகள்Announcements
Avvaiyar Padasalai emblem

ஔவையார் பாடசாலை Avvaiyar Padasalai

உலகின் முதல் மெய்நிகர்த் தமிழ்ப்பள்ளிWorld's First Virtual Tamil School

தன்னார்வலர்களால் மட்டுமே நடத்தப்படும், பதிவு செய்யப்பட்ட, இலாப நோக்கற்ற தமிழ்த் தொண்டு நிறுவனம். A registered 501(c)(3) non-profit public charity, run entirely by volunteers. Fully accredited by WASC, California, USA.

1:7
ஆசிரியர்-மாணவர் விகிதம்Teacher–Student Ratio
முன் மழலை-8Pre-K–8
வகுப்பு நிலைகள்Grade Levels
100%
தன்னார்வலர் நடத்துகிறார்கள்Volunteer-Run

தமிழ்ப்பள்ளி சென்று தமிழ் பயில வாய்ப்பில்லாத குழந்தைகளுக்குத் தமிழ்க் கல்வி வழங்குவது.

"To provide Tamil education to children who do not have the opportunity to attend in-person Tamil school."

செயல்நோக்கம்

எங்கள் செயல்நோக்கம்Our Mission

ஔவையார் பாடசாலை என்பது தன்னார்வலர்களால் மட்டுமே நடத்தப்படும் உலகின் முதல் மெய்நிகர்த் தமிழ்ப்பள்ளி. WASC அங்கீகாரம் பெற்ற இந்தப் பள்ளி, உலகின் எந்த மூலையில் இருந்தாலும் மாணவர்களுக்கு தமிழ் கல்வி வழங்குகிறது. Avvaiyar Padasalai is the world's first virtual Tamil school, run entirely by volunteers. WASC-accredited, we deliver Tamil education to students wherever they are in the world — ensuring no child loses touch with their heritage due to geography.

சிறப்புக்கூறுகள்Our Specialities

பள்ளியின் சிறப்புக்கூறுகள் What Makes Our School Special

தமிழ்ப்பள்ளியாக மட்டுமில்லாமல் — தமிழ் மொழி, பண்பாடு மற்றும் அடையாளத்தின் மீதான தூய அன்பினாலும் பெருமிதத்தினாலும் அர்ப்பணிப்புள்ள தன்னார்வலர்களால் கட்டியெழுப்பப்பட்ட ஒரு தமிழ் சமூக இயக்கம். More than just a school — a Tamil community movement built by volunteers devoted with pure love and pride for the Tamil language, culture, and identity.

  • தமிழ்ச்சுடரை மூட்டுதல் Igniting the Tamil Flame
    தமிழ் மொழியைக் கற்பித்தல் மட்டுமின்றி, அதன் தேவையும், பயனும், தொன்மைச் சிறப்பும் அறியச்செய்து மாணவர்களிடையே மொழியின் மீது அளப்பரிய காதலை உருவாக்குகிறோம். Rather than teaching Tamil as just another subject, we help students discover its necessity, its value, and its ancient greatness — kindling an immeasurable love for the language.
  • தமிழ் பெருமிதம் & சமூக மாற்றம் Tamil Pride & Community Impact
    மொழியைப் பேசவும் எழுதவும் கற்பதோடு நில்லாமல், தமிழராகப் பெருமிதம் கொண்டு, பெற்றோர்களையும் உறவினர்களையும் பிழையின்றிச் சிறப்பாகப் பேச ஊக்குவிக்கிறோம். Beyond learning to speak and write the language, we nurture pride in being Tamil and inspire students to encourage their own parents and relatives to speak it correctly and confidently.
  • எளிமையான நவீனக் கற்றல் Simple, Modern Learning
    நவீனத் தொழில்நுட்பங்களையும் புதிய கற்பித்தல் முறைகளையும் பயன்படுத்தி, தமிழ்க்கற்றலைச் சுமையின்றி மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றுகிறோம். Using modern technology and innovative teaching methods, we turn learning Tamil into a joyful experience, free of burden.
  • திறன் வெளிப்பாடும் தரச்சான்றும் Talent Showcase & Recognition
    பல்வேறு நிகழ்வுகள், களிநயமிக்க செயற்திட்டங்கள் மற்றும் போட்டிகள் மூலமாக மாணவர்களின் தமிழ்த்திறனை வெளிக்கொணர்ந்து அவர்களுக்கு உரிய தரச்சான்றும் பரிசுகளும் வழங்கிச் சிறப்பிக்கிறோம். Through events, fun projects, and competitions, we bring out students' Tamil talents and honor them with well-deserved certificates and prizes.
  • துடிப்பான வகுப்பறைச் சூழல் Lively Classroom Atmosphere
    ஒவ்வொரு வகுப்பும் மாணவர்களின் குறுந்திரைச்சுருள் (Reels) திறமையோடு தொடங்கி, கற்ற பாடங்களை மீளாய்வு செய்யும் களிநயமிக்க தமிழ் விளையாட்டுகளோடு நிறைவடைகிறது. Every class begins with students showcasing their talents through Reels and wraps up with fun Tamil games that review what was learned.
  • தனிப்பட்ட கவனமும் கலந்துரையாடலும் Personal Attention & Discussion
    குறைந்த ஆசிரியர்-மாணவர் விகிதம் என்பதால், ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட கவனம் கிடைப்பதுடன், வகுப்பறையில் உரையாடல்களும் கலந்துரையாடல்களும் இயல்பாக ஊக்குவிக்கப்படுகின்றன. Thanks to our low teacher-student ratio, every student gets individual attention, and conversation and discussion are naturally encouraged in the classroom.
  • கோடைகாலச் சிறப்பு வகுப்புகள் Summer Special Classes
    ஆண்டு முழுவதும் கற்க விரும்புவோருக்குப் பேச்சு, எழுத்து, ஓவியம், இசை மற்றும் கதைகள் அடங்கிய முற்றிலும் இலவசமான கோடைகால வகுப்புகளை நடத்துகிறோம். For students who want to keep learning all year round, we run completely free summer classes covering speech, writing, drawing, music, and storytelling.
  • மரபுக்கலைகளின் அறிமுகம் Introduction to Traditional Arts
    பண்ணிசை, அடிமுறை, பறை இசை போன்ற தமிழரின் மறந்துபோன பாரம்பரிய மரபுக்கலைகளையும் பண்பாட்டுத் திறன்களையும் மாணவர்களுக்கு முறைப்படி அறிமுகப்படுத்துகிறோம். We formally introduce students to Tamil's forgotten traditional art forms and cultural skills, such as Pannisai, Adimurai, and Parai drumming.

APS ஆனது கல்வித் தரம் மற்றும் நிறுவன நேர்மையின் மிக உயர்ந்த தரத்தை பேணுவதில் அர்ப்பணிப்புடன் உள்ளது.APS is committed to maintaining the highest standards of academic excellence.
Western Association of Schools and Colleges (WASC), California, USA இன் Accrediting Commission for Schools ஆல் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. Fully Accredited by the Accrediting Commission for Schools, Western Association of Schools and Colleges (WASC), California, USA.  www.acswasc.org

புதுப்பிப்புகள்Stay Updated

சமீபத்திய அறிவிப்புகள்Latest Announcements

APS மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கான முக்கியமான புதுப்பிப்புகள்.Important updates for all APS students, parents, and volunteers.

முக்கியம்IMPORTANT
Jul 19, 2026

பள்ளி ஆண்டு 2026–2027 பதிவு திறக்கப்பட்டுள்ளதுRegistration Open for SY 2026–27

முன் மழலை முதல் நிலை 8 வரை அனைத்து நிலைகளுக்கும் பதிவு தொடங்கிவிட்டது.Admissions are now open for all levels from Pre-K to Grade 8.

பள்ளிSCHOOL
Sep 5, 2026

பள்ளி தொடக்க விழா விரைவில்School Opening Ceremony Coming Soon

பள்ளியின் தொடக்க விழா பற்றிய செய்தி விரைவில் அறிவிக்கப்படும்.News regarding the school's inauguration ceremony will be announced soon.

பாடத்திட்டம்SYLLABUS
Jul 05, 2026

பாடத்திட்டம் புதிய ஆண்டிற்கு புதுப்பிக்கப்பட்டதுSyllabus Updated for the New Year

முன் மழலை முதல் நிலை 8 வரை புதுப்பிக்கப்பட்ட பாடத்திட்டத்தை பார்வையிடவும்.View the refreshed curriculum for every level from Pre-K through Grade 8.

அனைத்து அறிவிப்புகளையும் காண்கView All Announcements
விரைவு இணைப்புகள்Quick Links

எங்களுடன் இணைவீர் Join Our Community

இணையுங்கள்Join Us

ஆசிரியராக இணையுங்கள்Become a Teacher

ஆசிரியர் பணி

தமிழின் மீதான உங்கள் அன்பைப் பகிர்ந்து, எங்கள் அற்புதமான மாணவர்களின் கல்விப் பயணத்திற்குத் துணை நில்லுங்கள் — இது மிகவும் திருப்திகரமான தன்னார்வப் பணி அனுபவமாக அமையும். Share your love for Tamil and help guide our wonderful students on their learning journey — teaching with us is one of the most rewarding volunteer experiences you'll ever have.

சமூகம்Community

தன்னார்வலர் ஆகுங்கள் Become a Volunteer

தன்னார்வலர்

பெற்றோர்களும், உயர் நிலை பள்ளி மாணாக்கரும் எங்களுடன் இணைந்து பின்புலத்திலும், தொழில் நுட்பத்திலும் உதவிகள் செய்து பள்ளியின் வளர்ச்சிக்கு துணை நிற்கலாம். Parents and high school students can join us behind the scenes, lending a hand with technology and operations to support our school's growth.

பெற்றோர்Parents

பெற்றோர் தளம் Parent Portal

பெற்றோர் தளம்

உங்கள் குழந்தையின் வகுப்பு, வருகை மற்றும் அறிவிப்புகளை பெற்றோர் தளத்தில் பார்வையிடவும். View your child's class details, attendance, and school announcements in one place.

உங்கள் கருத்தை தெரியப்படுத்துங்கள் We Hear You!

ஔவையார் பாடசாலையின் சேவைகள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய தங்களின் கருத்துகளை எமக்குத் தெரியப்படுத்தவும். Please provide your valuable feedback on Avvaiyar Padasalai's services and operations. You can also share creative ideas to further benefit the Tamil community.